
பக்காத்தானிடம் இருந்து கட்சி தாவி, பறிக்கப்பட்ட தம்புன் தொகுதியை மீண்டும் கைப்பற்ற கடுமையாகப் பாடுபட வேண்டுமென பேராக் பிகேஆர் தலைவர் Chang Lih Kang கேட்டுக் கொண்டார்.
நமக்குத் துரோகம் இழைத்து, சதி செய்து பெர்சத்து அத்தொகுதியை அபகரித்ததை இனி மேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாதென அவர் வலியுறுத்தினார்.
அத்தொகுதியில் கட்சியின் மேல்மட்ட, செல்வாக்குமிக்க தலைவர் ஒருவரை நிறுத்தி, பெர்சத்து துணைத் தலைவர் Mohd Faizal Azumu (முகமட் ஃபைசால் அஸுமு) விடமிருந்து அத்தொகுதியைக் கைப்பற்ற வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார்.
அங்கு யார் போட்டியிட வேண்டுமென்று அவர் கூறாவிட்டாலும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அங்கு போட்டியிடலாம் என்ற கருத்து நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
