
மக்களின் நல்வாழ்வைப் புறக்கணித்து, பருவ மழைக் காலத்திலும் பொதுத்தேர்தலை நடத்தத் துணிந்திருக்கும் நீதிமன்றத் திரளைகளைக் கொண்ட தேசிய முன்னணியை மக்கள் தண்டிக்க வேண்டுமென பிகேஆரின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கேட்டுக் கொண்டார்.
ஏதிர்ப்பும், தடங்கலும் பல இருந்தாலும் கொண்ட கொள்கையோடும் துணிவோடும் முனைப்போடும் செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறித்து, நாட்டிற்கு நல்லாட்சி, தூய ஆட்சி, ஊழலற்ற ஆட்சியை அமைக்க பக்காத்தான் உறுப்புக் கட்சிகளும் அடிமட்டத் தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டுமென ரபிஸி கேட்டுக் கொண்டார்.
