28.5 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

மக்களின் கருத்துகளுக்குப் புறம்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

மக்களின் விருப்பத்திற்கு எதிராக, அம்னோவின் சுயநல நோக்கத்தை நிறைவேற்ற நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதாக ஜசெகவின் கிள்ளான் எம்பி Charles Santiago சார்ல்ஸ் சந்தியாகோவும் Young Syefura (யோங் சைஃபுரா)வும் சாடியுள்ளனர்.
நாடாளுமன்றம் கலைப்பானது அம்னோவின் நீதிமன்ற திரளைகளின் வற்புறுத்தலின் பேரில் நடந்துள்ளதாகவும், அவர்களுக்கு மக்களின் நல்வாழ்வு முக்கியமில்லை மாறாக, சுய லாபமே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் அம்னோவின் நீதிமன்றத் திரளைகளின் நோக்கமே வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் சிறைக்குச் செல்லாமல் தப்பிக்கவுமே என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஜசெகவின் மத்திய செயலவை உறுப்பினர் யோங் செய்ஃபுரா மக்களின் நலனை உதாசீனம் செய்து தேர்தலை நடத்தும் தேசிய முன்னணிக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles