28.5 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

இந்தியர்களின் தீபாவளிக்கு முக்கியத்துவம் தராதது ஏனோ?

நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது தீபாவளிப் பண்டிகையின்போது தேர்தல் பரப்புரை நடத்துவது அசெளகரியாத்தை ஏற்படுத்தும் என்பதை இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறந்து விட்டதாக ஜசெகவின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் குற்றம் சட்டினார்.
இந்நாட்டில் வசிக்கும் சிற்பான்மையினருக்கான முக்கியத்துவத்தை அளிக்கத் தவறி, போதுத்தேர்தல் நடத்தப்படுவதாக அவர் குறை கூறினார்.
சிறுபான்மை சமூகங்ளை உதாசீனம் செய்வதால் மலேசியா குடும்பத்தை அடைய முடியுமா என்பதை பிரதமர் இஸ்மாயில் பதில் சொல்ல வேண்டுமென குலசேகரன் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் வாக்குகள் நீண்டகால வைப்புத் தொகை எனும் அம்னோவின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி, அதன் தலைவர்களுக்குத் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles