
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கும் வேளையில், நாட்டை ஆள எந்தக் கூட்டணி வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
பல்லினங்களையும் அரவணைத்துச் செல்லும் பக்காத்தான் ஹராப்பான் வேண்டுமா அல்லது இனவாதம் பேசி சீன, இந்தியர்ளால் எந்தப் பயனும் இல்லையென்று கூறும் தேசிய முன்னணி வேண்டுமா என்பதை மக்களே முடிவெடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், சிறுபான்மை சமூகங்களையும் அரவணைத்துச் செல்வதே சமூக நீதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சீன, இந்திய சமூகங்களினால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லையென்று தேசிய முன்னணி கூறுகிறது. பெர்சத்துவும் பாஸ் கட்சியும் மலாய் ஆதிக்கத்தை நோக்கிச் செல்லும் கட்சிகளாகும். ஆனால், பக்காத்தான் மட்டுமே பல்லினங்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சி என்பதால் அதுவே மக்களுக்குத் தகுந்த கூட்டணி, ஆட்சியில் அமர வேண்டிய கூட்டணி என அன்வார் தெரிவித்தார்.
