
பொதுத்தேர்தல் திடீரென அறிவிக்கப் பட்டாலும் அதைக் கண்டு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எவ்வித அச்சமும் கொள்ளவில்லை என அதன் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு 5 அல்லது 6 தொகுதிகளைத் தவிர்த்து, ஏனைய தொகுதிகளில் முடிவடைந்தது உள்ளதாகவும் எல்லாம் சுமுகமாகவே நிறைவேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தன்னார்வலத் தொண்டர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வாக்காளர்களுடனான அணுகுமுறை கற்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் தன்னார்வலத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்றும், மதில்மேல் பூனையாக இருக்கும் வேட்பாளர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
தேசிய முன்னணி பழைய பலத்தை இழந்துள்ளதால், தேர்தலில் வெற்றி கொள்ள பக்காத்தான் கூட்டணிக்கு நிறையவே வாய்ப்புள்ளதாக ரபிஸி குறிப்பிட்டார்.
