
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் அனைவரும் பராமரிப்பு அரசாங்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்பு போல எந்த அதிகாரமும் இல்லை.
எந்தப் புதிய குத்தகையிலும் அவர்கள் கையெழுத்திட முடியாது. பரப்புரைகளுக்கு அவர்கள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. அமைச்சர்களும் துணையமைச்சர்களும் கொண்டிருக்கும் அரசு சொத்துகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
ஆக, அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மனம் போன போக்கில் செயல்பட முடியாது என்று பிகேஆரின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
