34 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 30-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது

-நக்கீரன்


தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுள்ள செம்மாந்த தலைமைக்கு அடுத்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும்.

அவரின் தலைமையில் 1992-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா, தற்பொழுது 30-ஆம் ஆண்டாக நாளை, அக்டோபர் 14-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெற உள்ளது என்று கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநர் மதிப்புமிகு டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டுவரும் படைப்பாளார்களை, குறிப்பாக சிறுகதை, மரபுக் கவிதை, கட்டுரை, புதுக்கவிதைப் பிரிவுகளில் தொடர்ந்து எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை அடையாளம் காணவும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இலக்கியப் போட்டி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழிலக்கியப் படைப்பாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை அனுப்பி இருந்தனர். இது, டான்ஸ்ரீ மொழி-இலக்கிய அறவாரியத்திற்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது.

இலக்கியப் போட்டியில் கலந்து கொண்டவர்கள், வெற்றி பெற்றவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி டத்தோ சகாதேவன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles