
அம்னோ தலைவர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே 15ஆவது பொதுத்தேர்தலை அதன் தலைவர் உட்பட மற்ற தலைவர்களும் கடுமையாக வலியுறுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க வைத்துள்ளனர்.
அம்னோ தலைவர்களை குறிவைத்து தொடுக்கப்படும் வழக்குகளைத் தவிடு பொடியாக்க அம்னோ பெரும்பான்மையாக வெற்றி பெற உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டுமென அண்மையில் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது என மகாதீர் சுட்டிக் கட்டினார்.
அம்னோ தலைவர்களின் நோக்கமே தங்களையும் குடும்பத்தினரையும் வளமாக்கிக் கொள்ளவே என்றும் அவர்களுக்கு நாடு, இனம், சமயம் போன்றவற்றின் மீது கிஞ்சிற்றும் அக்கறை இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
அம்னோவின் மற்ற தலைவர்களும் தாங்கள் எதிர்நோக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே ஸாஹிட்டோடு ஒத்து ஊதுவதாக மகாதீர் சாடினார்.
