
வரும் பொதுத்தேர்தலில் தாம் லங்காவி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
தற்போதைக்குத் தாம் ஒரு எம்பி பதவிக்காகவே போட்டியிடுவதாகவும், தமது கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தமது கூட்டணியின் சார்பில் பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.
97 வயதாகும் மகாதீர் 2003ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகி, அதன் பின்னர் 2018இல் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் பக்காத்தான் சார்பில் இரண்டாவது முறையாகத் தமது 92ஆவது வயதில் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
