30.8 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

பேரரசருக்குப் புகார் கடிதம் அனுப்பிய 12 அமைச்சர்களைப் பிரதமர் கடிந்து கொண்டார்

புறக்கதவு வழியாக ஆட்சிக்கு வந்ததாக அரசை விமர்சிப்பதைத் தடுக்கவும் அரசு நிர்வாகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும் மக்களின் கட்டளையைப் பெறவுமே பொதுத்தேர்தலை நடத்தும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் Ismail Sabri Yacob (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த உண்மைக்கு எதிராக பெரிக்காத்தானைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் பொதுத்தேர்தலை எதிர்த்து, பேரரசருக்குப் புகார் கடிதம் அனுப்பியது முறை தவறிய செயல், அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தவணை அடுத்தாண்டு ஜூலை வரை இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடிக்கு ஆதரவான தலைவர்கள் சிலர் பொதுத்தேர்தலை இவ்வாண்டிலேயே நடத்த பிரதமருக்குக் கடும் நெருக்குதலைக் கொடுத்த காரணத்தினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles