
சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சி இத்தவணையை முடிக்காமல் பொதுத்தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்தத் தேவையில்லை என்று சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah (ஷராஃபுடின் இக்ரிஸ் ஷா) உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு சேவையாற்றும்படியும் தேர்தலை இப்போதைக்கு நடத்த வேண்டாமென்றும் சுல்தான் உத்தரவிட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் Amirudin Shari (அமிருடின் ஷாரி) தெரிவித்துள்ளார்.
நேற்று புக்கிட் கயாங்கானில் சுல்தான் ஷாரிஃபுடினை சந்தித்த பின்னர், அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
