28.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பக்காத்தானில் இந்தியர் சார்பு கட்சியைச் சேர்க்க வாய்ப்பில்லை

பக்காத்தானுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தும் மலேசிய முன்னேற்ற கட்சியின்(எம் ஏபி) முயற்சி தொல்வியுற்றதாக அதன் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார்.
பக்காத்தான் காலத்தில் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த வேதமூர்த்தி, இந்தியர் கட்சியை பக்காத்தானுடன் சேர்க்கும் திட்டம் இல்லையென்று அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
அம்னோ, பெர்சத்து, பாஸ், அமானா, ஜசெக ஆகிய கட்சிகள் அவரவர் இனத்திற்காகப் பாடுபடும் வேளையில், எம்ஏபி கட்சி இந்தியர்களின் நலனுக்காகப் போராடுவதில் தவறேதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தாம் வாரிசான், மூடா, பெஜுவாங் ஆகிய கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்ள முயற்சி செய்யப் போவதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles