
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் வரை சிறைச்சாலைச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென சிறைத் துறை தலைமை இயக்குநர் Nordin Muhammad (நோர்டின் முகமட்) அறிவித்தார்.
சிறையில் நஜிப் இருக்கும் வரை தேர்தல் பரப்புரை செய்ய அவருக்கு அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரை செய்ய நஜிப்பை அனுமதிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் மனு செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் இதே பதில்தான் என்று நோர்டின் தெரிவித்தார்.
மேலும், சிலர் கூறுவது போல நஜிப்பிற்கு சிறப்புச் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளைப் போலவே அவர் சிறையில் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
