
நாட்டில் புகழ் பெற்ற லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ லிம் கோக் விங் இன்று காலமானார்.
இவர் மரணமடைந்ததை உதவியாளர் ஒருவர் உறுதிபடுத்தினார்.
கடந்த வாரம் வீட்டில் தவறி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரின் மரணம் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லிம் கோக் விங் தொழில்நுட்பப் பல்கலைக்மகழகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.



