
அரசாங்க விவகாரங்களில் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆலோசனை வழங்க பெட்- ரோனாஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Hassan Marican (ஹசான் மரிக்கான்) தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அன்வாரின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலோசனைக் குழு, அமைச்சரவைக்குத் தகுந்த ஆலோசனையைத் தேவைப்படும்போது வழங்கும்.
70 வயதான ஹசான், பெட்ரோனாஸ் நிறுவனத்தை உலகளாவிய நிறுவனமாக ஆக்கியதில் முக்கிய பங்காற்றியவராவார். பக்காத்தான் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பெருமக்கள் ஆலோசனைக் குழுவில் ஹசான் மரிக்கானும் ஒருவராகச் சேவையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



