
அடுத்துவரும் ஐந்தாண்டிற்கு நிலையான அரசாங்கம் தொடர அரசியல் கட்சி தலைவர்கள் இணங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் மக்களின் நலனில் அக்கரைக்கொண்ட கட்சித் தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டுவதாக டான்ஸ்ரீ க.குமரன் இன்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் அனல்பரக்கும் பரப்புரைகளைக் கொண்டு தேர்தலில் களம் கண்ட கட்சிகள் நாட்டு நலனையும், இன இணக்கத்தையும், முன்னிறுத்தி ஒருமைப்பாட்டு அரசங்கத்திற்கு ஆதரவு அளித்திருப்பது வளமான மலேசியாவின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளித்துள்ளது என்றார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசு எந்த நேரத்த்லும் கவிழ்ந்துவிடலாம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை இழந்துவிடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டுவந்த வேளையில் கட்சிகளுக்கிடையே நடந்துள்ள புரிந்துணர்வுமிக்க ஒமைருமைப்பாட்டு ஒப்பந்தம் நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியையுன் நிலையான ஆட்சிக்கு புதிய விடியலையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய முன்னணி, சரவாக் ஜி.பி.எஸ்., சபா ஜி.ஆர்.எஸ்., வாரிசான், கட்சிகளுடன் பக்கத்தான் அரசு இணைந்து ஆட்சி நடத்த பக்கத்தான் ஹரப்பான் முன்வந்திருப்பது, , பண்பட்ட அரசியல்வதியான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலையில் எந்த இனமும் விடுபடாமல் நல்ல அமையாதியான வளர்ச்சிமிக்க எதிர்காலத்தை நோக்கிகி நாடு பயணிக்க வழி வகுத்துள்ளாது.
இந்தியர்களைப் பொறுத்தவரை, இதுவரை நாடாளு மன்றம் கண்டிராத பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே எதிர்கட்சி வரிசையில்தான் அதிகமான இந்தியர்கள் இருப்பார்கள். இன்று ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததன்வழி எதிர்கட்சி வரிசையில் இந்தியர்கள் இல்லாமல் மூன்று கட்சிகளைச் சார்ந்த பதினொருவர் ஆளும் கட்சியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியர்களின் நேரடியான பிரதிநிதிகள் இல்லை என்றபோதிலும், தொகுதி மக்கள், நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவதுபோன்று இனம், மொழி, நலன் சார்ந்த விசயங்களை தவிர்த்துவிடலாகாது. கடந்தகால கசப்புணர்வுகளை புறந்தள்ளி, சமுதாய நலன் கருதி பொது நன்மையை முன்நிறுத்தி சீனர்-மலாயர்களைப் போன்று இந்திய நாடாளு மன்ற உறுப்பினர்களும் அரசியல் நடத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தான்ஸ்ரீ குமரன் மேலும் குறிப்பிட்டார்.



