26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஷெரட்டன் நகர்வுக்கு மகாதீரையே குறை கூற வேண்டும் – லிம் கிட் சியாங் கூறுகிறார்

🔥 Views : 8
👁 Reading Now : 20

பக்காத்தான் ஆட்சி கவிழக் காரணமாக இருந்த ஷெரட்டன் நகர்வுக்கு துன் மகாதீரே காரணமாக இருந்ததாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
வாக்குறுதி கொடுத்தது போல நாட்டில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர அவர் தோல்வி அடைந்ததால், ஆட்சியை இழக்க நேர்ந்தது.
தமது தவறை உணரத் தவறியிருக்கும் மகாதீர், நாட்டை வழி நடத்த அன்வார் இப்ராஹிமிற்கு தகுதியும் திறமையும் இல்லையென்று கூறியிருப்பது அவர் மீதான வெறுப்புணர்வே காரணம் என கிட் சியாங் சுட்டிக்காட்டினார்.
அன்வார் தமது திறமையைப் பயன்படுத்தி சிறப்பான நிர்வாகத்தை நடத்தி, ஊழலை ஒழித்து, நீதித் துறையில் நேர்மை நிலைக்கவும் மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடவும் வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க எதிரிகள் கண் கொத்திப் பாம்பாகக் காத்திருப்பதையும் அன்வார் கவனிக்கத் தவறக்கூடாதென்றும் கிட் சியாங் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles