31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 4,01,993 பேருக்கு தொற்று

🔥 Views : 7
👁 Reading Now : 45

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3523 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,99,988 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 32,68,710 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 15,49,89,635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles