33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பெராந்தி சிஸ்வா திட்டத்தில் 25,000 மாணவர்கள் மடிக் கணினியைக் கோரியுள்ளனர்

🔥 Views : 5
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

‘பெராந்தி சிஸ்வா’ எனும் பி40 குடும்ப மாணவர்களுக்குக் கையடக்கக் கணினி(டேப்லட்) வழங்கும் திட்டத்தில், கடந்தாண்டு கிடைக்கப்பட்ட 63,000 விண்ணப்பங்களில் இதுவரை, 20,000 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் பல்லூடக துணையமைச்சர் Teo Nie Ching (தியோ நீ சிங்) தெரிவித்தார்.
தமது தொகுதியான கூலாயில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளியில் நேற்று, 13 உயர் கல்வி மாணவர்களுக்கும் பல பள்ளி மாணவர்களுக்கும் டேப்லட்டுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுமையிலிருந்தும் பெறப்பட்ட 362,016 விண்ணப்பங்களில், 83 விழுக்காடு அல்லது 301,737 விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலிக்கப்பட்டு கணினிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles