31.1 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

நஜிப் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டாரா?
அபத்தமான பேச்சு

🔥 Views : 7
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய அமாட் ஸாஹிட் ஹமிடி, நஜிப் ரசாக்கிற்கு நேர்மையான நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் அரசியல் காரணமாகப் பழி வாங்கப்பட்டிருப்பதாகவும் அவரைக் குறிவைத்து வழக்கு சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருப்பது அபத்தம் என சாடப்பட்டுள்ளது.
அவரை விமர்சித்த மூடாவின் தலைமைச் செயலாளர் Amir Abd Hadi (அமிர் அப்துல் ஹாடி) இம்மாதிரியான கூற்று ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பெரும் இழுக்கைத் தேடித் தருவதோடு நீதிதுறையின் மீது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
எஸ்ஆர்சி வழக்கில் அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம், முறையீட்டு நீதிமன்றம் இறுதியாக கூட்டரசு நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் ஏகமனதாகக் தீர்ப்பளித்துள்ளது நேர்மையான நீதி அல்லாமல் பழி வாங்கும் செயலா என அவர் கேள்வி எழுப்பினார்.
செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் நஜிப் இன்னமும் ஒன்றுமறியா அப்பாவி என்றும் குற்றமே செய்யவில்லை என்றும் பிதற்றுவது பைத்தியக்காரத் தனம் என அமிர் அப்துல் ஹாடி வன்மையாகச் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles