
🔊To listen to this news in Tamil, Please select the text.
யானை நடமாட்டத்தை அடுத்து, Gerik – கிலிருந்து Jeli- யை இணைக்கும் சாலையைப் பயன்படுத்தும் பொது மக்கள் கவனமுடன் இருக்கும்படி பேராக் வனவிலங்கு துறை அறிவுறுத்தியுள்ளது . Gerik பகுதியில், யானை ஒன்று Toyota Vellfire காரை துரத்திச் சென்றதாக கூறும் காணொளி , சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து அத்துறையின் இயக்குநர் Yusoff Shariff அந்த அறிவுரையை வழங்கியிருக்கின்றார். அப்பகுதியில் ஏற்கனவே யானைகள் நடமாட்டம் தொடர்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதி வழியே செல்லும் வாகனமோட்டிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமெனவும் அவர் கூறினார்.
