
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவிலிருந்து விலக்கப்பட்டவர்களை பிகேஆரில் சேர்ப்பதில் மிகுந்த கவனம் வேண்டுமென்றும் அது அம்னோவுடனான உறவைச் சீர்குலைப்பதோடு அடிமட்டத் தொண்டர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என பெர்லிஸ் பிகேஆர் துணைத் தலைவரும் முன்னாள் செனா சட்டமன்ற உறுப்பினருமான Asrul Nizan Abd Jalil (அஸ்ருல் நிஸான் அப்துல் ஜாலில்) வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பரில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட Zahidi Zainul Abidin (ஸஹிடி ஸைனால் அபிடின்) பிகேஆரில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்ததை அடுத்து, இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.
பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத ஸஹிடி, அம்னோவுக்கு எதிராக பாடாங் பெசார் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1,939 வாக்குகளைப் பெற்ற பின்னர், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



