25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பாஸ், கெராக்கானின் தேர்தல் செலவினத்தை விசாரணை செய்ய வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

பொதுத்தேர்தலில் பாஸ், கெராக்கான் கட்சிகள் செலவிட்ட நிதி குறித்து விசாரணை செய்ய வேண்டுமென கம்பார் எம்பி Chong Zhemin (சோங் ஸெமின்) கேட்டுக் கொண்டார்.
பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் அதிகமாகச் செலவிட்டு தேர்தல் பரப்புரை செய்ததை அடுத்து, அதன் 30 கோடி ரிங்கிட் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, அதன் மீது எம்ஏசிசி விசாரணை செய்து வருகிறது.
பெரிக்காத்தான் தனது பரப்புரையை மிகுந்த பொருள் செலவில் மேற்கொண்டு நாடு முழுவதும் வாக்களிப்பு மையங்களை நிறுவி, மூலை முடுக்கெல்லாம் பதாகைகளையும் தொங்கவிட்டு தேர்தலை எதிர்கொண்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியிருந்தது.
அக்கூட்டணிக்கு எங்கிருந்து அவ்வளவு பணம் வந்ததைக் கண்டறிய அதன் கூட்டுக் கட்சிகளான பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றின் தேர்தல் செலவுகளையும் விசாரணை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
பெரிக்காத்தான் ஆட்சியில் இருந்தபோது அதனால் லாபம் சம்பாதித்த குத்தகையாளர்கள் 10 பேர் தேர்தலுக்கு உதவி செய்ததாகப் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு ஒரு எம்பி 2 லட்சமும் சட்டமன்ற உறுப்பனர் ஒரு லட்சம் ரிங்கிட் மட்டுமே செலவிட சட்டம் அனுதிக்கும்போது, பெரிக்காத்தான் வேட்பாளர்கள் பெருந் தொகையைச் செலவிட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles