
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்தாண்டு மே மாதம், சுபாங் ஜெயா பங்களா வீட்டில் கொலை செய்யப்பட்டு, வீட்டிற்குப் பின்னால் உள்ள குன்றில் புதைக்கப்பட்ட 25 வயது இந்தியரின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.
அதன் சந்தேகத்தின் பேரில், 25லிருந்து 35 வயதுடைய இரு உள்ளூர் பெண்கள், ஓர் இந்தியப் பெண், ஓர் இந்தோனேசியப் பெண், இந்திய ஆடவர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் Wan Azlan Wan Mamat (வான் அஸ்லான் வான் மாட்) தெரிவித்தார்.
முதியோர் இல்ல உரிமையாளரின் மனைவியுடன் கொல்லப்பட்ட நபர் கள்ள உறவில் இருந்த சந்தேகத்தின் பேரில், இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
அவர்கள் அனைவரும் அந்தப் பங்களா வீட்டில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் வேலை செய்தவர்கள் என்று தெரிகிறது.



