
🔊To listen to this news in Tamil, Please select the text.
வரும் மாநிலத் தேர்தலில் ஜசெக சிலாங்கூரில் 18 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது அதற்கு 15 தொகுதிகள் இருக்கின்றன.
2018இல் ஜசெக வென்ற 16 தொகுதிகளோடு பெர்சத்து போட்டியிட்ட 2 தொகுதிகளை அது கோருகிறது. செமிஞ்சேவும் செலாட் கிளாங்கும் அந்த இரு கூடுதல் தொகுதிகளாகும்.
2018 அது 16 தொகுதிகளை வெற்றி பெற்ற பின்னர், கடந்த ஜனவரி மாதம் தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் Brian Lai (பிரையன் லாய்) வாரிசானுக்கு கட்சி தாவினார்.
கட்சி வைத்திருக்கும் தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடுவதே உறுப்புக் கட்சிகளின் கொள்கை என சிலாங்கூர் ஜசெகவின் உதவித் தலைவர் Ng Suee Lim (இங் சுவீ லிம்) தெரிவித்தார்.



