
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவில் இருந்து கைரி ஜமாலுடின், Shahril Hamdan (ஷாஹ்ரில் ஹம்டான்) ஆகியோர் நீக்கப்பட்டது கட்சி மேலும் சரிய வாய்ப்பிருப்பதாக அதன் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரித்தார்.
எதிர்காலத்தில் கட்சியை வழி நடத்துவோர் இளைஞர்களாக இருக்கும்போது அவர்களின் கருத்துகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் தலைமைத்துவம் செவி சாய்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
கட்சியில் மிகவும் துடிப்பாக இருக்கும் இளைஞர்களை நீக்கும் நடவடிக்கை நீடித்தால், இளைஞர்கள் கட்சியில் சேர விரும்பாமல் ஒதுங்குவர். அது அம்னோவுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறுவது போல கட்சியில் எதிர்மறையான விமர்சனங்களும் முற்போக்கான கருத்துக்கும் இடமளிக்கப்- படுகின்றதா என்பது சந்தேகமே என்றும் அவர் குறிப்பிட்டார்.



