
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் அரசியலில் நீடிக்க பெரும் பணம் தேவையென்றும் அதற்கு அவருக்கு செல்வந்தர்களின் அரவணைப்பு நிச்சயமாகத் தேவைப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.
நாட்டில் அரசியலை நடத்த கட்சிகளுக்கும் தனி நபர்களுக்கும் பணம் இல்லையென்றால் ஜொலிக்க முடியாது என்றும் இங்கு எல்லாமே பணம்தான் என்ற இந்நிலை பலகாலமாகச் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
துன் மகாதீரின் பெஜுவாங் கட்சி குறுகிய காலத்தில் தொடக்கப்பட்டதற்கு 3 பணக்காரர்களின் உதவி இருந்ததால் மட்டுமே முடிந்ததாகவும் அது போன்றே கைரிக்கு கை கொடுத்துத் தூக்கிவிட, செல்வந்தர்கள் முன்வந்தால் மட்டுமே கைரி அரசியலில் தொடர முடியும். தவறினால் அவர் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகும் நிலையும் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அவரை ஏற்றுக் கொள்ள பெரிக்காத்தானும் பக்காத்தானும் முன் வந்த நிலையில், அதனை அவர் நாசுக்காக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



