
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் -19 தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்ட நடவடிக்கையிலும், அதற்கான தொகையை முடிவு செய்வதிலும், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
தேசிய சட்டத் துறை தலைவரின் அனுமதியின்றி கோவிட் தடுப்பு மருந்து கொள்முதலுக்கான ஆவணத்தில் சுகாதார அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறார்.
அதையடுத்து, நாட்டின் கோவிட் தடுப்பு மருந்து கொள்முதல் தொடர்பான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென பிரதமர் கூறினார்.
அந்த கொள்முதல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட சுகாதார அமைச்சர் யார் என வினவியபோது , அன்வார் அவ்வமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
