
நெகிரி செம்பிலான் ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தனது 6 மாதம் சம்பளத்தையும் அலவான்ஸ் தொகையையும் வழங்க முன்வந்திருக்கிறார்.
ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது ஆறு மாதச் சம்பளத்தையும் அலவான்ஸ் தொகையையும் தொகுதி மக்களின் சேவை மையத்திற்கு வழங்குகிறேன்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தொகுதி மக்களுக்கு உதவ முன் வந்திருப்பதாக அவர் சொன்னார்.
ரத்தாவ் சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வந்தோம்.
இப்போது கூடுதல் உதவி தேவைப்படுவதால் எனது 6 மாத சம்பளத்தையும் அவவான்ஸ் தொகையையும் வழங்குகிறேன் என்றார் அவர்.
