
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்ரோல், டீசலுக்கு அரசு வழங்கிவரும் உதவிநிதியை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லையென்று உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின துறையமைச்சர் Salahudin Ayub (சலாஹுடின் அயூப்) தெரிவித்தார்.
அது சம்பந்தமான பொருளாதார நிபுணர்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அதனைத் தேவைப்படுவோருக்கும் மட்டுமே பிரிவுக்கு மட்டுமே வழங்க திட்டமிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது, கடந்தாண்டு புத்ரா ஜெயா, உலு திரெங்கானு, பங்கோர், லாபுவானில் உள்ள 8,479 கிராமப்புற வர்த்தகர்கள் ரொக்கமில்லா வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.



