
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது மருமகனுக்கு குடிநுழைவுத் துறையின் கோடிக்கணக்கு மதிப்பிலான குத்தகைத் திட்டத்தை வழங்கியதாக அவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அதனை அரசியல் பழி வாங்கும் செயலென முஹிடின் கூறியிருப்பதற்குப் பதிலளித்த அன்வார், நெருப்பில்லாமல் புகையில்லை என்றும் இந்த விவகாரத்தை எம்ஏசிசி விசாரணை செய்து வருவதால், அதில் உண்மை இருக்குமா என்பது பின்னர்தான் தெரியவரும் என்று குறிப்பிட்டார்.
அந்த விவகாரத்தில் செலவு செய்யப்பட்ட கணக்கு கோப்புகளில் இருக்கின்றது, அதில் முஹிடினும் அவரது மருமகனும் உண்மையில் சம்பந்தப்பட்டிருந்தால் விசாரணையில் நிச்சயமாகத் தெரியவரும் என்றும் அதன் பின்னர் அது பழி வாங்கும் செயலா அல்லது இல்லையா என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அன்வார் தெரிவித்தார்.



