29.8 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

பெஜுவாங்கிலிருந்து விலகிய துன் மகாதீரை நஜிப் கடுமையாக விமர்சித்தார்

🔥 Views : 6
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாம் தோற்றுவித்த பெஜுவாங்கிலிருந்து துன் மகாதீரும் அவரது ஆதரவாளர்கள் 12 பேரும் விலகியதை நஜிப் ரசாக் விமர்சித்து கேலி பேசியுள்ளார்.
அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் 20 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த பின்னர், மகாதீர் பதவியிலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகினார்.
பதவி மோகம் கொண்ட அவர் அம்னோவிலிருந்து விலகி, பெர்சத்துவைத் தோற்றுவித்து, சிறையிலிருந்த அன்வாருடன் கூட்டு சேர்ந்து, 14ஆவது பொதுதேர்தலில் வென்று பாக்காத்தான் ஆட்சியில் பிரதமரானார்.
அதன்பின்னர், ஒருதலைபட்சமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய அவரை பெர்சத்து கட்சியும் அவைத் தலைவர் பதவியிலிருந்து விலக்கியது. அதன் பின்னர் பெஜுவாங்கை தோற்றுவித்து 15ஆவது பொதுத்தேர்தலில் லங்காவி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோற்றதோடு பெஜுவாங்கும் படுதோல்வி அடைந்தது.

இப்போது அதிலிருந்து விலகியுள்ளார். மலாய்க்காரர்கள் இரண்டுபட்டதற்கு அவரே முழு முதற் காரணம். இதனை மலாய் சமூகம் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டாது. இந்த அவப்பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் மகாதீர், இனி எதனைச் சாதிக்கப் போகிறார் என்பது பெரும் புதிராகவே இருப்பதாக நஜிப் கிண்டல் பேசியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles