
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் முன்னாள் அமைச்சர் நஸ்ரி அஸிஸ் அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
அதற்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம், நஸிரியின் நியமனத்தை அமெரிக்க அரசு 6 மாதங்களுக்கு முன்னதாகவே அங்கீகரித்துள்ள- தால், தமது அமைச்சரவையை ஒழுங்குபடுத்திய பின்னர், அதனை தற்போது தாம் அறிவித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா அங்கீகரித்த ஒருவரை மாற்றினால், அது தேவையற்ற சிக்கலையும் பிரச்சினையையும் உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். இதில் தமது பங்கு அதிமமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அது சம்பந்தமான விமர்சனம் அனுமதிக்கப்படுவதாகவும் ஆனால் கண்டனம் மிகவும் கடுமையாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்கட்டினார்.
நஸ்ரியின் நியமனத்தை முன்னாள் தூதர்களான Noor Faridah (நூர் ஃபரிடாவும்) Dennis Ignasias (டென்னிஸ் இக்னேஸியஸும்) கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
தமது நியமனத்தைத் தற்காத்துப் பேசியிருக்கும் நஸ்ரி, தாம் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் என்றும் தமக்குப் பேரரசரின் அங்கீரம் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்திருக்கிறார்.



