
🔊To listen to this news in Tamil, Please select the text.
கட்சிகள் நாட்டின் அரசியல் நிலையற்றத் தன்மையை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்றி இருந்தால், நாடு எதிர்நோக்கி இருந்த அரசியல் நெருக்கடி சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என பேரரசர் சுல்தான் அப்துல்லா தெரிவித்தார்.
அரசியல் இழுபறியின் காரணமாக 4 முறை அரசாங்கம் கை மாறியது ஒரு துரதிர்ஸ்டம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழ்நிலையில், அன்வார் இப்ராஹிம் பிரதமராகி இருக்கிறார்.
தமக்கிருந்த கடமையை உணர்ந்து, பேரரசர் ஒரு சுமுகமான நிலையை எட்ட கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10ஆவது பிரதமராகியுள்ளார்.
இந்நிலையில் 14ஆவது பொதுத்தேர்தலில் பிரதமரான துன் மகாதீர் தன்மூப்பாகப் பதவி விலகாதிருந்தால், கடந்த ஈராண்டுகளாக நாடு எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளும் சிக்கல்களும் நேர்ந்திருக்காது என்று பேரரசர் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழ்நிலையில் பாகுபாடில்லாமல் தாம் பொறுப்புகளை ஆற்றியிருப்பதாகவும், இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களது மனமாச்சரியங்களை நன்கு உணர்ந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் தங்களின் கடமையைச் சிறப்பாக ஆற்ற வேண்டுமென பேரரசர் கேட்டுக் கொண்டார்.
