31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ உறுதிப்படுத்தியது

🔥 Views : 8
👁 Reading Now : 61

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாடாளுமன்றத்தின் இந்தத் தவணை முடியும் வரை, ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை வழங்க அம்னோ உறுதி கொண்டிருப்பதாக அம்னோவின் தலைமைச் செயலாளர் Ahmad Mazlan (அமாட் மஸ்லான்) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
நாட்டில் அரசியல் நிலைத் தன்மை நிலவவும் நாடு, மக்களின் நல்வாழ்வு சிறக்கவும், பேரரசரின் விருப்பத்திற்கிணங்க இந்த முடிவை கட்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த முடிவினை ஒட்டி, நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமே பதவி வகிக்க அம்னோ முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2004ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆளும் கூட்டணிக்கு 148 எம்பிக்களின் ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதன்முறை என்றும் இது நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவது நிச்சயம் என்றும் அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles