27.9 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

நாட்டின் கடும் நெருக்கடிகளை வலுவோடு எதிர்கொண்ட மக்களுக்குப் பேரரசரின் பாராட்டு

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாடு எதிர்நோக்கிய கோவிட் பெருந்தொற்று, பொருளாதாரச் சரிவு, விலையேற்றம், அரசியல் நிலையற்ற போக்கு போன்ற நெருக்கடிகளை எதிர்த்துப் போராடி வெற்றி கொண்ட குடிமக்களுக்குப் பேரரசர் Sultan Abdullah sultan Ahmad Shah (சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா) தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
15ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாவது தவணையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பேரரசர் பொதுச்சேவை ஊழியர்கள், இராணுவம், போலீஸ் துறை, அரசு ஏஜென்சிகள் ஆகியவற்றிற்குத் தமது பாராட்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் சிறப்பான சேவையை வழங்க வேண்டுமென்றும் நிதி விரயத்தைத் தடுத்து, ஊழலை ஒழித்து, பொருளாதார வலுவை அதிகரிக்க வேண்டுமென பேரரசர் கேட்டுக் கொண்டார்.
அரசு பச்சைத் தொழில்நுட்பத்தையும் மின்னியல் வாகனங்களை உருவாக்கியும் நாட்டின் வருவாயை அதிகரிக்க முயல வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles