26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மீண்டும் அரங்கை அதிர வைக்க வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

🔥 Views : 5
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் தனது முதல் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து, இரண்டாவது முறையாக இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை, தனது ரசிகர்களை இசை வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்க வருகின்றார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

புக்கிட் ஜாலில் Axiata அரங்கை அதிர வைக்க ,ஹாரிஸ் இம்முறை மேலும் சில புதிய பாடகர்களுடன் மிகப் பெரிய இசை பட்டாளத்தை அழைத்து வரவிருக்கின்றார்.

Hearts Of Harris 2.0 இசை நிகழ்ச்சியில், பென்னி தயாள், ஹரிச்சரன், கார்த்திக், சைந்தவி, சுனிதா சாரதி, கிரிஷ், திவாகர் , ஶ்ரீதர் சேனா உட்பட மேலும் பல பாடகர்கள் கலந்து கொண்டு, ரசிகர்களை இசை மழையில் ஆட்டம் போட வைக்கவிருக்கின்றனர்.

இரண்டாவதாக நடைபெறும் ஹாரிசின் இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும், விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலே விற்று தீர்க்கப்பட்டது.
இதனால் இரண்டாவது முறையும் டிக்கெட்டை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்காக, மீண்டும் 3-வது முறையாக ஹாரிசின் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக இன்ப அதிர்ச்சியை தந்தனர் , இந்த இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான Malik Streams நிறுவனம்.

ஹாரிசின் மூன்றாவது இசை நிகழ்ச்சி, ஜூன் 17-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதன் டிக்கெட்டுக்கான விற்பனை இவ்வாரம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles