26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

செலாயாங் மருத்துவமனையில் நோயாளியை கத்தியால் குத்திய மனநலம் குன்றிய ஆடவர்

🔥 Views : 7
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

செலாயாங் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த ஒரு நோயாளியை, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்த வேளை, கத்தியால் குத்திய அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்ததாக , சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுபோன்ற எதிர்பாரா சம்பவம் எங்கும் நிகழலாம். எனினும், மருத்துவமனைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உட்படுத்திய SOP நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மறுபரிசீலிக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக, அந்த செய்தியினை முதலாவதாக வெளியிட்டிருந்த Straits Times Singapore ஊடகம், சம்பந்தப்பட்ட நோயாளி முதுகிலும் வயிற்றிலும் மூன்று முறை கத்தி குத்துக்கு ஆளானதாக தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles