28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தொழில் நெறிமுறையைப் பின்பற்றத் தவறிய வழக்கறிஞர் ஏ. சிவநேசனுக்கு அபராதம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

13 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலியல் நீதிமன்ற வழக்கில் ஆஜரான வழக்கறிஞரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான ஏ. சிவநேசன் என்பவர் வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியதை அடுத்து, அவருக்குக் கூட்டரசு நீதிமன்றம் 10,000 ரிங்கிட அபராதம் விதித்தது.
வழக்கறிஞர் பந்தமநாதன் என்பவருக்குப் பதிலாக வழக்கில் ஆஜரான சிவநேசன், அதற்கான பாரங்களைப் பூர்த்தி செய்யத் தவறியது, வழக்கின் தேதி மாற்றத்தை கட்சிக்காரருக்குத் தெரிவிக்காதது மேலும் வழக்கில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகத் தவறியது போன்ற விஷயங்களில் தவறிழைத்ததாக அவர் மீது வழக்கறிஞர், வழக்குரைஞர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்து, மேற்கண்ட தீர்ப்பினை அளித்தது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் நளினி பத்மநாதன், Vernon Ong (வெர்னோன் ஓங்), Harmindar Singh (ஹார்மிண்டர் சிங்) ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles