
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி துறவரம் பூண்டிருக்கலாமா என்றும் அவர் தமது புக்கிட் அந்தாராபங்சா தொகுதி மக்களுக்கு இன்னமும் சேவை வழங்கும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக பிகேஆரின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் Razeef Rakimin (ரஸீப் ரக்கிமின்) சீண்டினார்.
கடந்த பொதுத்தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தேர்தலில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் Aminudin Shaari (அமினுடின் ஷாரி) யிடம் தோல்வி அடைந்திருந்தாலும், அத்தொகுதிக்கு உட்பட்ட புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.
தாம் அரசியலில் தீவிர பங்கெடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கி இருக்கப் போவதாக அஸ்மின் அறிவித்திருப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பான செயலல்ல என்றும் அவர் இன்னமும் சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தைப் பெற்று வருவதை மறந்து விடக்கூடாது என்றும் ரஸீப் ரக்கிமின் இடித்துரைத்தார்.
