
🔊To listen to this news in Tamil, Please select the text.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணி பெரும் செலவிட்டு ஆளும் கூட்டணிக்கு ஈடாக தொகுதிளைக் கைப்பற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
விசாரணையில், 30 கோடி ரிங்கிட் வரவு வைக்கப்பட்டிருந்த அதன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அதான் மீது விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், முஹிடின் யாசின் பிரதமராக இருந்த காலத்தில் அரசு குத்தகைகளைப் பெற்ற நிறுவனங்கள் அவருக்குப் பெரும் தொகையைத் தேர்தல் நிதியாகத் தந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தங்களுக்குக் கிடைத்த குத்தகையின் செலவினத்தைக் கூட்டி, அதிலிருந்து பெற்ற அபரிமிதமான லாபத்தில் குத்தகை நிறுவனங்கள் பெர்சத்துவிற்கு நன்கொடை தந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இம்மாதிரியான ஊழலைத் தடுக்க முடியாது என்றும் அரசியல் நன்கொடையைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் செய்யப்படாத வரையில், இம்மாதிரியான ஊழல் தொடரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
