33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பொதுச் சேவைத் துறை எல்லா இன மக்களையும் பிரதிநிதிக்க வேண்டும்

🔥 Views : 11
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் 32 மில்லியன் மக்கள் தொகையில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கையில், அது நாட்டின் எல்லா இன மக்களையும் பிரதிநிதிக்கவில்லை என்று பெட்டாலிங் ஜெயா முன்னாள் எம்பி Kua Kia Soong (குவா கியா சூங்) சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மையில் உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மலேசியாவின் பொதுச் சேவையில் சேர்க்கப்படும் ஊழியர்களின் விகிதாசாரம் இன அடிப்படையில் இருப்பதாகவும் நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்குரிய நியாயமான, ஜனநாயகமான உரிமையை வழங்கவில்லை என்றும் அது தொடர்ந்தால் பொதுத்துறையில் ஊழல் பரவலாக நிகழ்வதைத் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளதை குவா சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொதுச்சேவை ஊழியர்களின் சேர்ப்பில் எல்லா இனங்களுக்கும் நியாயமான பங்கு இருக்க வேண்டியது அவசியம் என குவா கியா சூங் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles