30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

எனது செய்தி அரசியல் விளம்பரத்திற்காகத் திரிக்கப்பட்டுள்ளது

🔥 Views : 9
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் பொதுச் சேவையில் சீர்திருத்தம் தேவை என்ற எனது முகநூல் பதிவு சில செய்தி வெளியீடுகளால் திரிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது என பினாங்கு துணை முதல்வர் முனைவர் பி. ராமசாமி தெரிவித்தார்.
இதன் மூலம், சில மலிவான விளம்பரங்கள் தேடும் அரசியல்வாதிகள் இனவாத தூண்டலில் ஈடுபடுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி மற்றும் G25 செய்தித் தொடர்பாளர் நூர் ஃபரிடா அரிஃபின் ஆகியோர் முன்பு பரிந்துரைத்தபடி, பொதுச் சேவைத் துறையில் சீர்திருத்தங்களைத் தாம் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பக்காத்தான் கூட்டணியின் சில உறுப்புக் கட்சிகளின் விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள், துரதிர்ஷ்டவசமாக பொதுச் சேவையில் சீர்திருத்தத்திற்கான தமது வாதத்தை இன உணர்வைத் தூண்டுவதாக சித்திரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத் துறை பற்றிய எனது பார்வை தனிப்பட்டது, இது எனது கட்சி அல்லது அதன் தலைவர்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles