
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தான் கூட்டணியில் இருந்து பாஸ் கட்சி விலகும் என்ற வதந்தியில் உண்மையில்லை என்று அதன் துணைத் தலைவர் Tuan Ibraahim Tuan Man (துவான் இப்ராஹிம் துவான் மான்) தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்- களிடம் பேசிய அவர், அம்மாதிரியான வதந்தி உலவுவது தமக்குத் தெரியாது என்றும் அதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணில் இருந்து விலகும் காரணம் எதுவும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பெர்சத்துவின் பேராளர் மாநாட்டில் பாஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளத் தவறியதை அடுத்து மேற்கண்ட வதந்தி உலவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பாஸ் கட்சித் தொகுதிக் கூட்டங்கள் நடப்பதால் அவற்றைத் தொடக்கி வைக்க அதன் மேல்மட்டத் தலைவர்கள் செல்வதால் பெர்சத்துவின் பேராளர் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது.



