
🔊To listen to this news in Tamil, Please select the text.
சட்ட விரோதமாகப் பணம் பெற்ற ஆறு வழக்குகளை எதிர்நோக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது நேற்று ஏழாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2022 ஜனவரி 7ஆம் தேதி ஆம்கோர்ப் அலுவலகத்தில் Bukhari Iquiety (புக்காரி இக்குவிட்டி) நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் ரிங்கிட்டை சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.



