26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சிலாங்கூரை பக்காத்தான் வெல்வது அத்தனை சுலபமில்லை!

🔥 Views : 3
👁 Reading Now : 54

🔊To listen to this news in Tamil, Please select the text.

15ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் 40 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சபாக் பெர்னம், சுங்கை பெசார், உலு சிலாங்கூர், தஞ்சோங் காராங், காப்பார் மற்றும் கோலாலங்காட்டில் பெரிக்காத்தான் வெற்றி பெற்றுள்ளது.
புள்ளி விவரத்தின்படி தேர்தலில் புதிதாக வாக்களித்த இளம் வாக்காளர்களில் 65 விழுக்காட்டினர் பெரிக்காத்தானுக்கு வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், வரவிருக்கும் 6 மாநிலத் தேர்தல்களில் பெரிக்காத்தானின் பச்சை அலை வீசத் தொடங்கினால் அது பக்காத்தானுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, பக்காத்தான் புதிய வாக்காளர்களைத் தன்பக்கம் ஈர்த்து, சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற அவர்களுக்கு ஏற்ற வகையில் தனது வியூகத்தை மாற்ற வேண்டுமெனவும் எச்சரிக்கப்படுகிறது.
மேலும், முஹிடின் மீதான அனுதாப அலையை மட்டுப்படுத்த பக்காத்தான் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆலோசனை கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles