25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அரசு சார்பு நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் ஏன்?

🔥 Views : 3
👁 Reading Now : 59

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த 20 ஆண்டுகளாக அரசு சார்பு நிறுவனங்களில் அரசியல் சார்ந்த உறுப்பினர்- களை நியமிப்பதை எதிர்த்து வந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்போது தமது ஆட்சியிலும் அதே போன்ற தவறை செய்துள்ளது வருத்தமளிப்பதாக பெர்சேவின் தலைவர் Thomas Fann (தோமஸ் ஃபான்) குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய ஆட்சிகளில் நடந்தது போலவே ஒற்றுமை அரசாங்கமும் நடந்து கொள்வது எதிர்பார்த்திராத ஒன்று என்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை ஜிஎல்சி நிறுவனங்களில் நியமித்தால் அவர்களால் தொகுதி மக்களுக்கும் நியமிக்கப்பட்ட பதவிகளிலும் சிறப்பான சேவையை வழங்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜிஎல்சிக்கள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவை சிக்கனமாகச் செலவிட்டு வருவாயை ஈட்ட வேண்டுமே ஒழிய, அதிகளவு சம்பளம், அன்வன்ஸ் போன்றவற்றில் பணத்தை ஊதாரித் தனமாக செலவிட்டு நட்டத்தை ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் பிரதிநிதிகளை விட சம்பந்தப்பட்ட தொழில் ரீதியான நிபுணர்களை அந்த அமைப்புகளில் நியமிப்பதே சரியாக இருக்கும் என்றும் தோமஸ் ஃபான் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் Ashraf Wajdi Dusuki (அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி)யை மாராவின் தலைவராகவும் பாலிக் பூலாவ் எம்பி Bakthiar Wan Chik (பக்தியார் வான் சிக்கை) நிதியமைச்சின் கீழுள்ள My Creative Venchers (மை கிரியேட்டிவ் வெஞ்சர்ஸ்) நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதைத் துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles