32.5 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

600 தொழிலாளர்களுக்கான 3.8 மில்லியன் ரிங்கிட் சம்பளப் பாக்கியைச் செலுத்த சம்மதம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

சபா, கோத்தா கினபாலு தொழிலியல் பூங்காவில் நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குத்தகை அதிகாரிகள் மூவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தங்களின் சம்பளம் குறித்த நேரத்தில் வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்தச் சட்ட விரோத காரியத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இதில் சபா தொழிலியல் இலாகா தலையிட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் 600 தொழிலாளர்களுக்கான 3.8 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த ஒப்புக் கொண்டது.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் மாதச் சம்பளம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. நிறுவனம் சந்தித்த சில பிரச்சினைகளால் மார்ச் மாதச் சம்பளம் குறித்த நேரத்தில் வழங்கப்பட முடியாமல் போனதால் பிரச்சினை வெடித்தாக நம்பப்படுகிறது.
எனினும் பேச்சுவார்த்தையின் முடிவில், மார்ச் மாதச் சம்பளம் ஏப்ரல் 17, 18ஆம் தேதிகளில் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles