27.5 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

சாதாரண விசாரணைக்காகவே அமைச்சர் வீட்டிற்குச் சென்றோம்

🔥 Views : 23
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரின் வீட்டிற்கு வழக்கமான விசாரணைக்காகவே தாங்கள் சென்றதாகவும் அது சோதனை நடவடிக்கை அல்லவென எம்ஏசிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமது வீட்டிற்கு எம்ஏசிசி அதிகாரிகள் சோதனையிட வரவில்லை என்று அமைச்சர் திட்டவட்டமாக மறுத்த வேளையில், பல ஊடகங்கள் அதனை வேறு மாதிரியாகக் குறிப்பிட்டுள்ளன.
அந்நியத் தொழிலாளர் தருவிப்பில் ஊழல் நடந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிவகுமாரின் தனிப்பட்ட செயலாளரும் அவரின் மூத்த அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்ட பின்னர், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் அமைச்சரின் அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்னும் சில அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles